தத்தளிக்கும் மக்கள்.. முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த விஜயகாந்த்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானி அணை, பில்லூர் அணை நிரம்பியுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இது நீலகிரி மாவட்டத்தில் கடந்த 101 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. 

அவலாஞ்சி, கெத்தை, எமரால்டு, பைக்காரா உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.இதனால் பாதுகாப்பு கருத்தி கொண்டு, இந்த அணைகளின் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக உதவிடவேண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவை மற்றும் நீலகிரியில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி துரிதநடவடிக்கை எடுத்து அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். 

முக்கியமாக நீலகிரியில் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். அதேபோல் கோவையிலும் மழை வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகிறது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து “இயன்றதை செய்வோம் இல்லாதவற்கே” என்ற கொள்கைப்படி நம்மால் முடிந்த உதவிகளை அந்த பகுதி மக்களுக்கு செய்திடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth report for nilagiri rain


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->