ஒட்டு மொத்த உலக தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் மோடி.. தமிழக அரசியல் தலைவர் புகழாரம்!! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் முறைசாரா உச்சிமாநாடு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இரண்டாவது உச்சிமாநாடு சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நேற்றும், இன்றும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் இது குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை வெளிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி ஒட்டு மொத்த உலக தமிழர்களை பெருமைபடுத்திவிட்டார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் புகழாரம்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழகத்தில் சீன அதிபருடன் இரண்டு நாட்களாக தங்கியிருந்து, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, தமிழக உணவை உண்டு, தமிழகத்தின் பெருமைகளையும், மாமல்லபுரம் சிற்ப கலைகள் குறித்தும், தமிழகத்திற்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பண்டையகால நட்பு குறித்தும் விளக்கி, அதை மீண்டும் புதுப்பித்து, இரு நாட்டு உறவையும் பலப்படுத்தி, உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்த்தது மிகவும் பாராட்டுக்குரியது.

அதேபோல, இன்று காலையில் நடைபயிற்சியின் போது, கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, தூய்மையான இந்தியாவை உருவாக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth report for modi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->