தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் தமிழகத்தில் உள்ள அரசியல் பிரபலங்கள், திரைப்பட பிரபலங்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர்.  தமிழகத்தில் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவீத வாக்குகள் பதிவானது. 

இந்நிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார். விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து வாக்களிப்பார்கள் என கூறினார். இதை தொடர்ந்து பிற்பகலில் விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் வந்து வாக்களித்து சென்றனர்.

அப்போது விஜயகாந்த் மாலையில் வந்து வாக்களிப்பார் என் விஜய் பிரபாகரன் கூறினார். அதனால், விஜயகாந்தின் வருகையை தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் தேமுதிக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை  ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார் என விஜயகாந்த் நிச்சயமாக வருவார் என தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் வாக்குப்பதிவு நிறைவடையும் 7  மணி வரையிலும், விஜயகாந்த் அங்கு வரவில்லை. இதனால் அங்கு காத்திருந்த தேமுதிகவினர் மிகுந்த வருத்தம் அடைந்து திரும்பினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth did not vote


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->