மனுவை வாபஸ் பெற்றதால், விஜயகாந்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு பல்வேறு அவதூறுகளை தொடர்ந்திருந்தது. 

கடந்த மாதம் அவதூறு வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டது தொடர்பாக உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. இதையடுத்து அந்த அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டதற்கான தொடரப்பட்ட வழக்குகள் விஜயகாந்த் தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது. 

இந்நிலையில், அவதூறு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற விரும்பிய விஜயகாந்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு தேனி பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்ததால், தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கை ரத்து செய்ய விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தார். மேலும், மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற விஜயகாந்த் தரப்பில் அனுமதி அளித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth case for high court


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->