எனக்கு இதுதான் வேண்டும் அடம்பிடிக்கும் விஜயகாந்த் மகன்! தயாரான தேமுதிக!! - Seithipunal
Seithipunal


கடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் விஜயகாந்த் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடாமல் இருந்தார். அவருக்கு பதிலாக தேமுதிக சார்பாக பிரேமலதா மற்றும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.  

கடந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மட்டும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்த போது, அவரது பிரச்சார வாகனத்தை விஜய பிரபாகரன் பயன்படுத்தி வந்தார். தற்போது தேமுதிகவில் இருக்கும் இரண்டு பிரச்சார வாகனங்களை விஜயபிரபாகரனும், பிரேமலதாவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை தேறி வருவதால், வரும் தேர்தலில் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இதனால் விஜயகாந்த் பிரச்சார வாகனத்தை விஜயபிரபாகரன் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த் மகனுக்கும் பிரச்சார வாகனம் வாங்கலாம் என்று யோசித்து வருவதாக தேமுதிக வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இதனையடுத்து சேட்டிலைட் டிவி என சகல வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனத்தை, கட்சி நிதியில் இருந்து வாங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijaya prabhakaran new vehicle


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->