பயந்துட்டியா குமாரு? ஸ்டாலினுக்கு அஞ்சிய நடிகர் விஜய்.? ரசிகர்களுக்கு கடும் எச்சரிக்கை.!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் இரண்டு படங்கள் ஹிட் ஆனால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் நான்தான் என்பதுபோல் நடிகர்கள் செயல்பட்டு வருவது வழக்கமான ஒன்றுதான். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

ஆனால், அரசியலுக்கு வருகிறேன்.. வருகிறேன்.. வருகிறேன்.. என்று சொல்லிக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றி தங்களது படத்தை ஓட்டுவதற்காக மட்டும் பயன்படுத்தும் நடிகர்களும் இருந்து வருகின்றனர். அந்த வகை நடிகர்களில் விஜய்க்கு தற்போது இதுவடிக்கையாகியுள்ளது.

எப்போதெல்லாம் படங்கள் வெளியாகிறதோ., எப்போதெல்லாம் தமிழகத்தில் தேர்தல் நடக்கிறோதோ., அப்போதெல்லாம் அவர் அரசியலுக்கு வரப்போவதாக அவரின் ரசிகர்கள் போஸ்டர் அடித்து, கொடி பிடித்து கோஷம் இட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் யார் ஆட்சி செய்தாலும், எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் ஒருவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று தைரியமாக முடிவெடுத்தால், அரசியலுக்கு வரத்தான் போகிறார். அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து இது போன்ற போஸ்டர்கள் ஒட்டி வருவதைக் கண்டும், காணாமல் அதை ரசித்துக் கொண்டும், எதிர்ப்பது போல் எதிர்த்துக் கொண்டும்., தெளிவான ஒரு முடிவு எடுக்காத நடிகர் விஜய்யால் பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.

திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு 'தளபதி' என்று அவரின் தொண்டர்கள் பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கும் இளையதளபதியிலிருந்து 'தளபதி' என்று மாறி, தற்போது அவரும் தளபதி ஆகிவிட்டதால், இந்த தளபதி என்ற டைட்டில் கார்டு யாருக்கு சொந்தம் என்ற பஞ்சாயத்து அண்மையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரங்கேறி அடங்கிப்போனது.

இந்த நிலையில், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பலர் இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நடிகர் விஜய் இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, நடிகர் விஜய் புகைப்படத்தை முன்னாள் முதலமைச்சர்கள் உடன் பயன்படுத்தி 2026 ஆம் ஆண்டு கோட்டையை நோக்கி நல்லாட்சி., அண்ணா விஜய் அண்ணா என்றெல்லாம் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்த போஸ்டர்களில் தளபதி என்ற வார்த்தையை அழுத்தமாக பெரிதாக எழுதி வருவதால் திமுகவினருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒரு தளபதி தான் இருக்கவேண்டும் என்று எண்ணினார்களோ என்னவோ தெரியவில்லை. தற்போது நடிகர் விஜய் ஒப்புதலோடு அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“அண்மைக்காலமாக, இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் அல்லது ஆர்வக்கோளாறால் விஜய்யை பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை விஜய் படத்துடன் இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

ரசிகர்கள் மற்றும் இயக்கத்தினரின் இச்செயல்களை அவ்வப்போது விஜய் அனுமதியோடு கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும், இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபடுவது வருத்தத்துக்கு உரியது.

இதுபோன்ற செயல்களை விஜய் என்றும் விரும்புவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், விஜய்யின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விஜய் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பயந்துட்டியா குமாரு?

இந்த அறிக்கையில் எங்கும் விஜய் அரசியலுக்கு வருவார், வரமாட்டார் ஒன்றும் இல்லை. போஸ்டர் ஒட்டிய புண்ணியவான்களே., என் பொலப்புல மண்ணை அள்ளி போடாதீங்க., கொஞ்சம் அமைதியை இருங்கள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் போல., என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay warning


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->