மரியாதை கிடையாது., போவியா.! தளபதியை., தள்ளிவிட்டு இனிதே தொடங்கிய சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


ஒரு நடிகர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இதில், வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் வரத்தான் போகிறார்கள். அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அவர்கள் வரப்போவதில்லை. வராத ஒருவர் வா என்பதும்., வந்த ஒருவரை போ என்பதும் தமிழக அரசியல் களத்தில் இது புதிதல்ல.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் நான் அரசியலுக்கு வருவேன்., வருவேன்., வருவேன் என்று சொல்லியே கடைசி வரை வராமல் சென்று விட்டார்.

தற்போது அதே பாணியில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற ஒரு வீண் விவாதத்தை தமிழக அரசியல் களத்தில் அவ்வப்போது அவரின் ரசிகர்கள் கிளப்பி விட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் பெயர், அவரின் இயக்கத்தின் பெயரை தேர்தலில் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று நடிகர் விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியத்தில், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரகுபதி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ,மேலும், இலத்தூர் ஒன்றியம், வெளிக்காடு ஊராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுபா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். 

இது மட்டுமில்லாமல் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். நடிகர் ரஜினி ரசிகர்கள் ஏமாந்ததுபோல் ஏமாறாமல் உஷாராக விஜய் ரசிகர்கள் களமிறங்கி இருப்பது நடிகர் விஜய்க்கு மேலும் சிக்கல் தான். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VIJAY fans in local body election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->