நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல்., கண்டுகொள்ளாத வேட்பாளர்கள்..! - Seithipunal
Seithipunal


நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவரவில்லை.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று (செப்.23) தொடங்கியது. அரசு விடுமுறை தினமான வருகிற 28, 29-ம் தேதி தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

நாங்குநேரி தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக திருநெல்வேலி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நாங்குநேரி வட்டாட்சியர் ரஹமத்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இவர்கள் வேட்புமனுக்களை பெறுகின்றனர். 200 வேட்புமனுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருகிற 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்நிலையில், முதல் நாளான இன்று யாருமே மனு தாக்கல் செய்யவில்லை. பிரதான கட்சிகளான அதிமுக, காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களே அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று மாலை அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்குநேரியில் போட்டியிட அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் விருப்பமனு கொடுத்துள்ளார். அவருக்கு சீட் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vetpumanu thaakuthal in naanguneri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->