திக்.. திக்... தினகரன்! குக்கர் வழக்கில் சற்றுமுன் வரை! திடீர் ட்விஸ்ட் கொடுக்கும் ஓபிஎஸ் இபிஎஸ்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவை தேர்தலும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு  தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்றே 26.03.2019 கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து கட்சியினரும் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அமமுக, ஓர் அணி தானே தவிர, கட்சியாக இதுவரை பதிவாகவில்லை என்று அமமுக-விற்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது என்பது இயலாத காரியம் என தேர்தல் ஆணையம் கூறியது.  

இதனையடுத்து, அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் தரப்பில்உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணையை மார்ச் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. டி.டி.வி.தினகரன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, எங்களுக்கு நேரம் இல்லை  வேட்பு மனு தாக்கல் நாளை 26.03.2019 மதியம் 3 மணிக்கு முடிவடைகிறது என்பதால் இதுகுறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும், இறுதி முடிவு நாளை ( இன்று  26.03.2019 ) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார். 

இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் ஆர் கே நகர் இடைதேர்தலில் உங்களுக்கு குக்கர் சின்னம் வழங்கியது யார் என்று தினகரன் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி வைத்தனர். அதற்கு டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, தேர்தல் அதிகாரி குக்கர் சின்னத்தை வழங்கியதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபில் தெரிவித்தார். 

பின்னர் அமமுக  என்பது தனிநபர் கட்சி அல்ல, 20 எம்எல்எக்களை கொண்ட கட்சி, இதனை பதிவு செய்வதற்கு விண்ணபித்து உள்ளதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் ஒரே நேரத்தில் குக்கர், இரட்டை இலை சினத்தினை ஒரே நேரத்தில் எதற்கு கேட்டீர்கள் என நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பினார். 

அரசியல் சாசன பிரிவு 29 A ன் படி சின்னத்தை ஒதுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை என கூறினார். ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் இருப்பதாக கபில்சிபில் தெரிவித்தார். நிரந்தர சின்னம் பெற கட்சியை பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி கூற, அதற்கு நேரமில்லை என தினகரன் தரப்பு கூரியுள்ளது. 

குக்கர் இல்லை என்றாலும் வேறு ஒரு பொதுவான சின்னத்தினை அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பு கேட்டுள்ளது. மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினை கட்சியாக பதிவு செய்கிறோம் என எழுத்து பூர்வமாக உத்திரவாதம் அளிப்பதாக தினகரன் தரப்பு கூறியுள்ளது. 

இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் போது சின்னம் உடனே வழங்க முடியாது. பதிவு செய்து சின்னம் வழங்க 30 நாட்கள் ஆகும் அதனால் போது சின்னம் அளிக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தனி தனிசின்னம் வழங்குவதற்கு பதில் ஏன் ஒரே பொதுவான சின்னம் வழங்க கூடாது என தலைமை நீதிபதி தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டார்.  பொது சின்னம் வழங்குவதாக இருந்தால் அது குறித்து கருத்து கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தினகரன் கட்சியின் 59 வேட்பாளர்களும் ( 40 மக்களவை தேர்தல் வேட்பாளர்கள், 18 இடைதேர்தல் வேட்பாளர்கள், தட்டஞ்சாவடி இடைதேர்தல் வேட்பாளர் ) சுயேச்சையாக தனி தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

முடிந்தவரை இவர்களுக்கு பொதுசின்னம் வழங்கலாமே என நீதிபதிகள் கேட்க, அதற்கு அவர்கள் சுயேச்சையாக தான் கருதபடுவார்கள். சுயேச்சை வேட்பாளர்களுக்கு தனி தனி சின்னம் தான் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதில் திடீர் திருப்பமாக தினகரன் கட்சிக்கு பொதுசின்னம் வழங்க ஓபிஎஸ் இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து வருகிறது..... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

verdict of pressure cooker case symbol of ammk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->