திடீர்திருப்பம் | வேங்கைவயல் மலம் கலந்த குடிநீர் தொட்டியை தமிழக அரசு இடிக்க உத்தரவிடவில்லை!  - Seithipunal
Seithipunal


வேங்கைவயல் கிராமத்தில் நீர்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில், நீர்தேக்க தொட்டியை இடிக்க தமிழக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில், சிலர் மலம் கழிந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 

சாத்திய தீண்டாமை காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாக விசிக உள்ளிட்ட சில பட்டியல் இன சாதி கட்சிகள் குற்றச்சாட்டின். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடி.,க்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே சம்மந்தப்பட்ட அந்த நீர்த்தேக்க தொட்டியை இடிக்க வேண்டும் என்று விசிக உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து தமிழக  அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு இடிக்க உத்தரவிட்டதாக ஆளும் திமுகவின் சார்பு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், தற்போதுள்ள இந்த மலம் கலந்த தொட்டியை இடிப்பதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vengaivayal issue some important info


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->