வேங்கைவயலில் ஒரு சமுதாய மக்களை மட்டும் பார்த்த திமுக அமைச்சர்கள் - முற்றுகை,வாக்குவாதம்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் கழிவு நீர் கலக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், திமுக அமைச்சர்களின் செயலளால் மேலும் சர்ச்சை எழுந்துள்ளது.

வேங்கைவயல் கிராமத்தில் இன்று நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அங்கிருந்த இறையூர் அய்யனார் கோயிலில் அமைச்சர்களுடன் பொதுமக்களும் வழிபட்டனர். 

இதற்கிடையே,  திமுக அமைச்சர்கள் ஒரு சமூகத்தினரை மட்டுமே பார்த்து பேசி விட்டு சென்றுவிட்டதாகவும், மற்றொரு சமுதாயத்தினரை அமைச்சர்கள் பார்க்க, பேசவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், இறையூர் அய்யனார் கோயில் வழிபாட்டின்போதும், மற்றொரு சமுதாயத்தினரை அமைச்சர்கள் அழைக்கவில்லை என்றும், பாரபட்சத்தோடு அந்த சமூகத்தினர் நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது..

மேலும், அங்கிருந்த இலுப்பூர் கோட்டாட்சியர் மற்றும் போலீஸாரை முற்றுகையிட்ட பெண்கள் இதுகுறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, "புதுக்கோட்டை மாவட்டத்தில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. அப்படி நடப்பதாக சிலரால் கிளப்பிவிடப்படுகிறது” என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vengaivayal issue DMK Minister


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->