உள்ளாட்சி தேர்தல் குறித்து சட்டமன்றத்தில் ஸ்டாலினுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்ட அமைச்சர் தகவல்!! - Seithipunal
Seithipunal


இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் இனியாவது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா?, என கேள்வி எழுப்பிய ஸ்டாலின்,  உள்ளாட்சி  தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் மத்திய அரசின் நிதி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளதாக குற்றம்சாட்டினார்.

எதிர் கட்சி தலைவர் ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், 21 ஆண்டுகளுக்கு பிறகு அணைத்து  மாவட்டகளிலும் வார்டு வரையறைகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி தேர்தலை இனி தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டுமென தெரிவித்தார்.

இதற்க்கிடையே, உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு காலஅவகாசம் கோரியது, இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் அக்டோபர் 31 ஆம் தேதிவரை தமிழக அரசுக்கு கல்லாவகாசம் அளித்து உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

velumani says about local body election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->