முக்கிய பொறுப்பாளரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்ட, வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த E. கௌதம் , (அதிமுக குடியாத்தம் நகர தகவல் தொழில்நுட்பப் பிரி துணைத் தலைவர்) அக்கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுகவின் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர்களான, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

"கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் 

வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு . E. கௌதம், (குடியாத்தம் நகர தகவல் தொழில்நுட்பப் பிரி துணைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். 

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்." என்று ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellur admk member dismissed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->