முக்கிய கட்சி பிரமுகர் வீட்டில் லட்ச லட்சமாக சிக்கிய பணம்.,சூடுபிடிக்கும் வேலூர் தேர்தல் களம்!! - Seithipunal
Seithipunal


வேலூர் மக்களவை தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடக்கவுள்ளது தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் வருமான வரித்துறையினர் தனியாக குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், வேலூர் வசூரில் உள்ள  தி.மு.க. பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.27 லட்சத்து 74 ஆயிரம் ரொக்க பணம் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் நேற்று வரை நடத்திய வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.44 லட்சத்து 32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, வாணியம்பாடி அருகே பறக்கும் படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரூ.89,41,900 மதிப்புள்ள தங்கத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் முடியும் வரை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தொகையை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்ல வேண்டாம். என பொதுமக்களுக்கும், வியாபார நிறுவனங்ளுக்கும், வியாபாரிளுக்கும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தேர்தலுக்காக பணம், பொருள் கொடுப்பது தொடர்பான புகார்களை 1800-425-3692 என்ற கட்டணமில்லா இலவச தொலைப்பேசி எண்ணில் தெரிவிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore election updates


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->