வேலூரில் தொடங்கியது வாக்குப்பதிவு!! வெற்றி  தோல்வியை நிர்ணைக்கப்போவது இந்த வாக்காளர்கள் தான்!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு  தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் அந்த கட்சியின் பொருளாளரும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், சுயட்சே உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று காலை மாதிரி 6 மணிக்கு வாக்குபதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும் பங்குகொள்ளும் இந்த வாக்குபதிவில், வாக்குபதிவு எந்திரத்தின் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது,  அதை தொடர்ந்து பொதுமக்கள் இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

வேலூர் மக்களவை தொகுதியில் பொறுத்தவரையில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சம்  பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரம் பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர். இந்த தொகுதியில் பெண் வாக்காளர்களே அதிகம் அதனால் வெற்றி தோல்வியை நிர்ணையிக்கும் இடத்தில் பெண்கள் உள்ளனர், வாக்காளர்கள் வாக்களிப்பதற்க்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குசாவடியாக 130 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வி.வி.பாட் கருவிகளும், வாக்கு எண்ணிக்கை மையமான ராணிபேட்டையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்படும். இதையடுத்து வரும் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore election started


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->