வேலூர் தேர்தல் வாகன சோதனையின் இத்தனை கோடிகள் சிக்கியுள்ளன., தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!! - Seithipunal
Seithipunal


வேலூர் மக்களவை தேர்தல் நாளை நடக்கவுள்ளது தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. 24 மணி நேரமும் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வந்தனர்.

மேலும் வருமான வரித்துறையினர் தனியாக குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை நடத்திய வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 57 லட்ச ரூபாய் மேற்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

மேலும், வேலூர் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தேர்தலையொட்டி 19 கம்பெனி துணை ராணுவப்படை வருகைதந்திருப்பதாகவும், இதுவரை 3 கோடியே 57 பணமும், 89 லட்ச ரூபாய் மதிப்பிலான 2.89 கிலோ தங்கம், ரூபாய் 5.7 லட்சம் மதிப்பிலான 13.8 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, வேலூர் தேர்தல் தொடர்பாக தற்போது வரை எந்த அரசியல் கட்சியும் புகார் எதுவும் வழங்கவில்லை.

நாளை வாக்கு பதிவு நடக்கவுள்ள வேலூர் தொகுதி முழுவதும் 3,957 காவல் துறையினர், 1,600 மத்திய ஆயுதப்படை காவலர்கள், 400 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore election money


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->