வேலூர் தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 543  தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தேர்தலானது நிறுத்திவைக்கப்பட்டது. அது தமிழகத்தின் வேலூர் தொகுதி ஆகும். 

இந்த  தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களின் கல்லூரியில் பணம் சிக்கியதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து தேர்தல் பின்னர் அறிவிக்கப்பட்டு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் வேலூர வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த முறை திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி  வேட்பாளர் புதியநீதி கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் போட்டியிட்டார்கள். ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவும் ஆகஸ்ட்  9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 11 முதல் 18 முறை வேட்புமனு தாக்கல் செய்யலாம், ஜூலை 19 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் பரிசீலனை, ஜூலை 22 ஆம் தேதி வாபஸ் வாங்க கடைசி நாளாகும். 

இந்நிலையில் இந்த தொகுதியின் அதிமுக வேட்பாளராக அதிமுக கூட்டணி கட்சியான புதியநீதி கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் போட்டியிடுவார் என ஓபிஎஸ் இபிஎஸ் அறிவித்துள்ளார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Constituency admk candidate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->