நாகையில் உச்சகட்ட பாதுகாப்பு., தனிமைப்படுத்தப்பட்ட நகரம்.! ஆதார் கார்டு இருந்தால் தான் உள்ளே அனுமதி.! - Seithipunal
Seithipunal


நாகை : வேளாங்கண்ணியில் இன்று கொடியேற்றம் நடைபெற உள்ளதால், பக்தர்கள் வருவதை தடுக்க 19 இடத்தில் இரும்பு தடுப்பு அமைத்து போலீஸ் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கயமாதா பேராலயத்தில் வேளாங்கண்ணி மாதாவின் பிறந்த நாள் விழா ஆகஸ்ட்  29 தேதி தொடங்கி செப்டம்பர் 8 தேதி வரை நவநாள் விழாவாக நடைபெறும்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வெளி மாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பர். இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக நவநாள் விழாவில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். 

இந்த விழாவை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைகாட்சிகள் மூலம் காணலாம் எனவும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார். 

இதனை தொடர்ந்து வேளாங்கண்ணியில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுள்ளது. இந்த நிலையில், வேளாங்கண்ணியில் இன்று கொடியேற்றம் நடைபெற உள்ளதால், பக்தர்கள் வருவதை தடுக்க 19 இடத்தில் இரும்பு தடுப்பு அமைத்து போலீஸ் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நவநாள் விழா காரணமாக, வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 1500 கடைகள், 250 லாட்ஜ் ஆகியவை மறுதேதி குறிப்பிடும் வரை மூடப்பட்டு இருக்கும். தடையை மீறி பக்தர்கள் வருவதை தடுக்க, ஆர்ச், மாத்தாங்காடு பைபாஸ் சாலை, சக்தி விநாயகர் கோயில் தெரு, பெட்ரோல் பங்க் ரோடு, செருதூர் பாலம் உள்ளிட்ட 19 இடங்களில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்தவர்கள் ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம், ரேசன்கார்டு என ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்தாள் தன உள்ளே அனுமதி என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

velankanni annai maadha temple function


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->