தமிழக அரசு மீது அடுக்கடுக்காக விமர்சனம் வைத்த திருமாவளவன்! கூட்டணி நிலைப்பாடு என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதுமே சாதிய தீண்டாமைகள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. மத்திய அரசின் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தமிழக அரசு முறையாக அமல்படுத்தாதது தான் காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர்த் தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொல்.திருமாவளவன் கண்டன உரையாற்றினார். 

அவர் பேசியதாவது, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வன்கொடுமையை போலவே, தற்போது புதுக்கோட்டையில் நடந்திருக்கிறது. குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது இழிவான செயல், இது தமிழ்நாட்டிற்கு பெரும் தலைக்குனிவு, வெட்கக்கேடு. இந்த கிராமம் புதுக்கோட்டையின் மற்ற பகுதிகளிலும் சாதிய தீண்டாமை, சாதிய பாகுபாடுகள் இன்னும் அதிகமாக இருக்கிறது, ஆகவே புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்.

புதுக்கோட்டை  மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே சாதிய தீண்டாமைகள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. மத்திய அரசின் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை, தமிழக அரசு முறையாக அமல்படுத்தாதது தான் இதற்கு காரணம். தமிழக அரசு நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டினாலும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அதிகார வர்க்கமும் அரசு அதிகாரிகளும் இணைந்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்.

வேங்கைவயலில் பட்டியலின மக்கள் கோயிலில் வழிபடவும், பட்டியலின மக்களுக்கு எதிராக பேசிய சாமியாடியாக நடித்த பெண்ணையும், டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்தவர்கள் மீதும் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தமிழக அரசு சரியாக அமல்படுத்தவில்லை என குற்றம்ச்சாட்டியதால், திமுக கூட்டணியில் விரிசலா எனக்கேட்டதற்கு, தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு எந்தவித சிக்கலும் எப்போதும் இல்லை. எங்களது கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு" என்று நழுவினார் திருமாவளவன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK leader thirumavalavan criticism tn govt for implement pcr act improperly


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->