காங்கிரஸ் எம்.பி-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு!! அதிரடி உத்தரவை பிறப்பித்த உய்ரநீதிமன்றம்!!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வான காங்கிரஸ் கட்சியை சேர்த்த எச்.வசந்தகுமார், தனது நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்தார் இதையடுத்து, எச்.வசந்தகுமாரின் கடித்தை சபாநாயகர் ஏற்று கொண்டார். இதன் பின்னர் நாங்குநேரி காலியான தொகுதியாக தமிழக அரசு அரசனை வெளியிட்டது. 

மேலும் நாங்குநேரி தொகுதி காலியானது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலர் அளித்த கடிதத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பியது. விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிரிபார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை நடத்த ஆகும் செலவை நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமாரிடமிருந்து வசூலிக்கக் கோரிய வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கை விசாரணை செய்த  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவுயிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vasantha kumar case judgement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->