விசிக பிழைப்பில் மண்ணள்ளி போட்ட பாஜக.! முதலில் வந்த கதறல் சத்தம்.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனால் அந்த இடம் தற்போது காலியாக இருக்கிறது. அந்த இடத்திற்கு தற்போது கடும் போட்டி நிலவி வந்தது. கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்தி முடித்த பின்னர் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் என பாஜக மேலிடம் அறிவித்து இருந்தது. இதனால் தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார்? என்ற கேள்வி பல நாட்களாக இருந்து வந்தது.  

தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்க 11 பேர் கொண்ட பட்டியலை பாஜக தயாரித்து, பாஜக தேசியத் தலைவருக்கு அனுப்பி இருந்தது. அந்த பட்டியலில், பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி. பி. ராதாகிருஷ்ணன்,  கே. டி. ராகவன், மதுரை சீனிவாசன், கருப்பு முருகானந்தம்,  ஏ. பி. முருகானந்தம், ஏ. என். எஸ். பிரசாந்த், குப்புராம் ஆகியோர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. 

இந்நிலையில் தற்போது, பாஜகவின் தமிழக தலைவராக தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசிக வன்னியரசு," ஆறுமாத காலமாக பாஜகவிற்கு தலைவரே இல்லாத சூழலில் எல்.முருகன் நியமிக்கப்பட்டிருப்பது, தமிழகத்தில் தலித்களை குறிவைத்து பாஜக நகர்கிறது என்பது தெரிகிறது. மதவெறி பாஜகவிடம் தலித்துகள் எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். உங்கள் ஏமாற்றுவேலை தமிழகத்தில் எடுபடாது மோடி" என்று தெரிவித்துள்ளார். 

தலித்துகளின் வாக்குகளை குறிவைத்து பாஜகவின் நகர்வு அமைவதாகவும், இதனால் விசிகவின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று வன்னியரசு மற்றும் திருமாவளவன் உள்ளிட்டோர் பீதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanniyarasu says about bjp head of tn


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->