மனதார நன்றி தெரிவிக்கும் வன்னியர் சமூக மக்கள்.! ட்ரெண்ட் ஆகும் இரண்டு ஹேஸ்டேக்.! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் நடத்தியுள்ளது.

கடந்த 2020 வருடம் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து வன்னியர் தனி இடஒதுக்கீடு போராட்டத்தை பாமக -வன்னியர் சங்கம் நடத்தி வருகிறது. 

சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன் டிசம்பர் 1 முதல் 4-ஆம் தேதி  4 நாட்களுக்கு தொடர் போராட்டம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் டிசம்பர் 14-ஆம் தேதி போராட்டம், டிசம்பர் 23-ஆம் தேதி பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம், டிசம்பர் 30-ஆம் தேதி ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள் முன் போராட்டம், ஜனவரி 7-ஆம் நாள் நகராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் என கடந்த இரு மாதங்களில் மட்டும் 5 கட்டங்களாக 8 நாட்கள் வன்னிய மக்களின் சமூகநீதிக்காக தீவிரமாக போராடி  வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டத் தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து தமிழக அரசு பாமாவுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செய்ய சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்தை சேர்ந்த அனைவரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு மனதார நன்றியை தெரிவித்து வருகின்றனர். 

சமூகவலைத்தளமா பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் #ThankyouTngovt என்ற ஹேஸ்டேக் மூலமாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு  #Thanks_DrAyya  என்ற ஹேஸ்டேக் மூலமாகவும் வன்னியர் சமூக மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VANNIYAR THANKS TO TN GOVT ANDA DR RAMADOSS


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->