#தமிழகம் || வன்னியர் அக்னி கலசத்தை அகற்றவேண்டும்., புகாரளித்த விசிக.! அகற்றவந்த அதிகாரிகள்., சாலை மறியல், போராட்டம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அருகே வன்னியர்களின் அடையாளமும், வன்னியர் சங்கத்தின் சின்னமாகவும் இருக்கக்கூடிய அக்னி கலச குண்டத்தை, அரசு அதிகாரிகள் அகற்ற முயன்றதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 1989ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையில், வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி கலசம் நிறுவப்பட்டது. இதனை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறந்து வைத்துள்ளார்.

இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணி மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கான பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம், பின்னர் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இடம் புகார் அளித்துள்ளனர். 

இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வரும் என்று கருதி, வன்னியர் சங்க அக்னி கலசத்தை அகற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி, காவல்துறை பாதுகாப்புடன் அக்னி கலசத்தை அகற்றும் முயற்சியில் வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.

இதனையறிந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு அக்னி கலசத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், "நாங்கள் இந்த இடத்தில் புதிதாக எந்த ஒரு அக்னி கலசத்தையும் நிறுவவில்லை. ஏற்கனவே நாங்கள் நிறுவியிருந்த அக்கினி கலசத்தை தான் மீண்டும் பழைய இடத்தில் வைத்துள்ளோம்.

ஆனால் தற்போது சட்டப்படி அக்னி கலச குண்டத்தை அகற்றுகிறோம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அப்படியானால் நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து தலைவர்களின் சிலைகள் மற்றும் கட்சி கொடிகள் அனைத்தையும் இவர்கள் அகற்றட்டும்" என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VANNIYAR SIMPLE ISSUE THIRUVANNAMALAI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->