பா.ரஞ்சித்தை லெப்ட், ரைட் வாங்கிய வானதி ஸ்ரீனிவாசன்.! பதிலடி கிடைக்குமா.?! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 10 லட்சம் நிதியுதவி, வேலைவாய்ப்பு மற்றும் வீடுகள் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்வை வைத்து பலரும் அரசியல் செய்து வருகின்றனர். சிலர் நடுநிலைவாதிகள் என்ற பெயரில் பிரிவினை பேசி வருபவர்களையும் தற்போது அடையாளம் காணமுடிகின்றது. தமிழகத்தில் பல வருடங்களாகவே ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால், அதை வைத்து அரசியல் செய்வது மோசமான பழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் தீண்டாமை சுவர் இருந்ததன் காரணமாக 17 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் எத்தனை பேர் இதுபோன்று பலியாக போகிறார்களோ என்று கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பினார்.

இதை பார்த்த பலரும் கொந்தளித்து ,"இப்படியெல்லாம் பேச உங்களுக்கு எப்படி மனசு வருகிறது? இதில் கூடவா சாதியை வைத்து அரசியல் செய்ய வேண்டும்.? என்ன பிழைப்பு இது? என்று பலரும் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

இந்த, நிலையில் இதற்கு பாஜக பிரமுகரான வானதி சீனிவாசன், "எங்கே இருந்து தீண்டாமைச்சுவர் என்ற வார்த்தையை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்பதுதான் தெரியவில்லை, அதை நீங்கள் சொல்ல வேண்டும்.! சுவரின் இருபுறம் இருப்பவர்களும் நிலத்தின் உரிமையாளர்கள் தான், சுவர் எந்த பக்கம் இருந்தாலும் பாதிப்பு ஏற்பட்டு தான் இருக்கும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் ஜாதியை உள்ளே நுழைப்பது என்ன மாதிரியான பழக்கம்.?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு ரஞ்சித் தரப்பிலிருந்து என்ன பதில் வரும் என்பது குறித்து அனைவரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VANADHI SRINIVASAN SPEECH ABOUT RANJITH


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->