இடைக்கால பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் - பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓபிஎஸ் தரப்பில், "கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய தான் தயாராக இருந்தேன். ஆனால் என்னை வேண்டாம் என்று வெளியே தள்ளி முடிவெடுத்து விட்டனர்" என்று ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், அதிமுகவின் பொதுக்குழு சம்பந்தமான மேலும் சில வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து வருகின்ற தசரா பண்டிகை முடிந்த பிறகு விசாரித்து கொள்ளலாம். அப்போது இரு தரப்பினரும் தங்களது இறுதி வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்க்கு ஓபிஎஸ் தரப்பு, "எதிர் மனுதாரர் தரப்பில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்கின் முடிவு வெளியாகும் வரை பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறாது என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து ஓபிஎஸ் மேல்முறையீடு குறித்து விரிவான பதில் அளிக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இனி அரசியலில் நாங்கள் தான் ஜீரோ என விமர்சித்தினர், இனி நாங்கள் தான் ஹீரோ என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

மேலும், ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய இடைக்கால பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்றும் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaithiyalingam say about sc order ops side


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->