'வரிந்து கட்டிய வக்காலத்து.',  செய்தியாளர்களிடம் பேசிய வைகோ.. கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கு சரியாக இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இன்று தினத்தந்தி பத்திரிகை நிறுவனத்தின் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இவர் "தமிழர் தந்தை" என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடைபெறுகிறது. ஆனால் அதை சீர்குலைக்க ஒரு சிலர் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீட்டு சம்பவங்கள் அரங்கேறி சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியான நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என தெரிவித்திருப்பது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko speech about MK Stalin TN govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->