காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.. மாநிலங்களவையில் கொந்தளிக்கும் தமிழக எம்பிக்கள்.!! - Seithipunal
Seithipunal


பரபரப்பான சூழலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் முக்கிய முடிவை அறிவித்தார் அமித்ஷா.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது என்று அமித்ஷா அறிவித்துள்ளார். சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும். லடாக் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மாநிலங்களவையில் வைகோ, திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம் என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko says kashmir 370 has cancel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->