மு க ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது காலத்தின் கட்டாயம்.. வைகோ பேட்டி.!! - Seithipunal
Seithipunal


புத்தாண்டு தினமான நேற்று சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அங்கம் வகித்து மதிமுக தேர்தலை சந்திக்கிறோம். 

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும். மு க ஸ்டாலின் முதலமைச்சராவது காலத்தின் கட்டாயம். கட்சி தொடங்குகிறேன் என்று அறிவித்த பிறகு அந்த எண்ணத்தில் ரஜினிகாந்த் முழுமையாக செயல்பட்டார். ஆனால் மருத்துவரின் ஆலோசனையை ஏற்று அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். 

அவரது கருத்தை நான் வரவேற்கிறேன். ஏனெனில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து இருக்கும் அவர் உடல்நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர் நல்ல முடிவுதான் எடுத்துள்ளார். அவரின் இந்த முடிவு குறித்து தமிழருவி மணியன் உள்ளிட்டோர் குறித்தும் மீம்ஸ் உருவாக்கப்படுவது தவறு. அது அவர்களது மனதில் காயத்தை ஏற்படுத்தும். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி நடந்த போது அவரது பழைய உற்சாகம் இல்லை. மெதுவாகவே நடந்தார். அந்த காட்சியை பார்த்து நான் மனம் உடைந்தேன் எனக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko says about next cm for mk stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->