#BREAKING: வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினியின் ஆதரவு., சற்றுமுன் வைகோ பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தர மாட்டார் எனக் கருதுகிறேன் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "பாஜகவின் மத்திய அரசு, சமஸ்கிரதம், இந்தி மயமாகிவிட்ட ஒரு மாநிலமாக ஆக்கிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள்.

இது திராவிட இயக்கத்தின் கோட்டை என்பதை மறந்துவிட்டு, அவர்கள் இந்த முயற்சியை முயற்சிக்கிறார்கள். அவர்களின் இந்த முயற்சியில் தோல்வி அடைவார்கள். ஆகவே இதனை நான் பெரும் சவாலாக கருதவில்லை.

நடிகர் ரஜினிகாந்த அழுத்தத்தின் காரணமாக அரசியலில் இருந்து விலகியதாக, செய்திகளில் -பத்திரிகைகளில் கட்டுரைகள் வருகின்றன. நான் அதுபோல் கருதவில்லை. அவர் சுயமாக சிந்தித்து, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.

சுயமாக சிந்தித்து தான் இந்த முடிவை எடுத்துள்ளார். அழுத்தங்களின் காரணமாக அவர் இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வந்ததாக நான் கருதவில்லை. ரஜினி கட்சி ஆரம்பித்து இருந்தால் கூட திராவிட முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெற்றிருக்கும்.

1996 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை கொடுத்தார். அவரின் அறிக்கையால் நான் ரொம்பவும் பாதிக்கப்பட்டு இருந்தேன். மூப்பனார் மற்றும் திமுக அந்த தேர்தலில் கூட்டணி வைத்திருந்தது.

ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று நாலு வரியில் ஒரு செய்தியை கொடுத்து விட்டு, எங்கு பார்த்தாலும் ரஜினியின் படம் தான் இருந்தது. ஆகவே, அப்போது திமுக கூட்டணிக்கு ஆதரவாக அந்த முடிவை எடுத்தார். இந்த தேர்தல் களத்தில் அந்த மாதிரியான ஒரு முடிவை (ரஜினி திமுகவுக்கு ஆதரவு தரமாட்டார் என்று) எடுப்பார் என்று நான் கருதவில்லை. அவர் யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பு இல்லை." என்று வைகோ தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko say about rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->