எங்களுக்கு தனி சின்னம் தான் வேண்டும்., திமுகவின் கூட்டணி கட்சி தலைவர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி உள்ளன.

திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் கூட்டணியும் இந்த தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்டவைகள் தனித்துப் போட்டியிடும். இல்லையெனில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த கூட்டணி, வரும் சட்டமன்ற தேர்தலிலும் அப்படியே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக  கூட்டணி கட்சிகளுக்கு தனி சின்னம் ஒத்துக்காது என்றும், குறைந்த தொகுதிகளை ஒதுக்கி, திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே கூட்டணி காட்சிகளை போட்டியிட நிபந்தனை விதித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தனி சின்னத்தில் போட்டியிட விரும்புவதாக, அக்கட்சியின் தலைவர் வைகோ இன்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko say about election simple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->