#BREAKING: திமுக கூட்டணியில் மதிமுக., சற்றுமுன் வைகோ பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும், விசிக-வுக்கு 6 தொகுதிகளையும் ஒதுக்கி ஒப்பந்தம் ஆகியுள்ளது.

மேலும், காங்கிரஸ், சிபிஐ, சிபிஐஎம், மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை அனைத்துமே இழுபறியில் உள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவிக்கையில், 

"திமுகவுடன் மதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவகாரத்தை சுமூகமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து நல்ல ஒரு முடிவை நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொன்று இருக்கிறோம்.

காலதாமதம் ஏன் என்ற விவரங்கள் எல்லாம் நான் சொல்ல முடியாது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்கிறோம், அவர்கள் எத்தனை தொகுதிகள் தருகிறார்கள் என்பது குறித்தெல்லாம் செய்தியாளர்களுக்கு தெரிவிக்க முடியாது.

திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைத் தரவில்லை என்ற குற்றச்சாட்டு பொய்யானது அதுபோன்று திமுக இல்லை." என்று வைகோ தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAIKO SAY ABOUT DMK ALLIANCE PRESS MEET


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->