#சற்றுமுன் : மதிமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த வைகோவின் உறவினர்.! கலக்கத்தில் வைகோ.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி ஒன்று அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என் ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் இரண்டு கூட்டணி கட்சியும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், கோவில்பட்டியில் தமிழிசைக்கு ஆதரவாக முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி  வாக்கு சேகரித்தார். அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி மகன் கார்த்திகேயன் கோவில்பட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko relation join admk


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->