வைகோ கைது, உடனே விடுவிக்க திருமாவளவன் கோரிக்கை!  - Seithipunal
Seithipunal


இலங்கை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த  நினைவுத்தூண் இரவோடு இரவாக சிங்கள அரசால் தகர்க்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பை கண்டித்து, சென்னையிலுள்ள இலங்கை துணைத்தூதரகத்தை முற்றுகையிடும்  போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ அறிவித்து இருந்தார். 

இன்று சென்னையில் நடந்த சிங்கள துணை தூதரகத்தை முற்றகையிடும் போராட்டத்தில், வைகோ தலைமையில் போராட்டம் செய்த அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க கோரி, விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். 

அவருடைய டுவிட்டர் பதிவில், "சென்னையில் இன்று நடந்த சிங்கள துணை தூதரகத்தை முற்றகையிடும் அறப்போரில் திரு.#வைகோ அவர்களின் தலைமையில் கைதுசெய்யப்பட்ட யாவரையும் தமிழக அரசு உடனே விடுதலை செய்யவேண்டும். அவர்கள்மீதான பொய்வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். விசிக வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன்,செல்வம் உட்பட பலர் கைது" என அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko arrest for protest oppose srilankan embassy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->