திடீர் மாற்றம்.! சற்றுமுன் அந்தர்பல்டி அடித்த வைகோ.!! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


கஜா புயல், நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ,முன்னிறுத்தி தமிழகம் வரும் பிரதமர் மோடி அவர்களுக்கு, கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை திக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆரம்பித்தன.

கடந்த ஆறு மாதங்களாகவே, பிரதமர் மோடி வரும் போது எல்லாம் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், நேரடியாக அவருக்கு கருப்புக்கொடி காட்டி தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.

மேலும், எப்போது பிரதமர் மோடி தமிழகம் வந்தாலும், தான் கருப்புக் கொடி காட்டுவேன் என்று சூளுரைத்து வந்தார். இந்த நிலையில் நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி அவர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீர் என்று அறிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது, பிரதமர் மோடி அவர்கள் அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்தால், அவருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம் என்றும்,  நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி அவர்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட மாட்டோம் என்றும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

திடீரென வைகோ தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியது தமிழக அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடி வரும் போதெல்லாம் கையில் கருப்பு கொடியுடன் வைகோ கிளம்புவார் என்று தமிழகமே எதிர்பார்த்த நிலையில், நாளை வைகோவின் போராட்டம் இல்லாமல் இருப்பது பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியாக தான் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAIKO ANNOUNCE BALCK FLAG PROTEST CANCELLED


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->