திமுக, அதிமுக சேர்ந்து அரங்கேற்றிய நிகழ்வு., ஆப்சென்ட்டான பாமக!! - Seithipunal
Seithipunal


இன்றுடன் மாநிலங்களவை அதிமுக எம்பிக்கள் ஆன மைத்திரே, கே. ஆர். அர்ஜுன், லட்சுமணன், ரத்தினவேல் உள்ளிட்டோர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான டி.ராஜா உள்ளிட்டோரின் பதவி காலம் நிறைவடைகிறது.

ஏற்கனவே, இந்த காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி திமுக மற்றும் அதிமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் சண்முகம் வழக்கறிஞர் வில்சன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுபோல, அதிமுக சார்பில் முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும், தேர்தெடுக்கப்பட்டனர்.

இந்தநிலையில், திமுக சார்பில் தேர்தெடுக்கப்ட்ட மதிமுக பொது செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார். அதேபோல திமுகவின் மூத்த வழக்கறிஞர்களான  சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.

அதிமுக சார்பில் தேர்தெடுக்கப்ட்ட முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி-யாக பதவியேற்று கொண்டனர். இதையடுத்து பாமக சார்பில் தேர்தெடுக்கப்பட்ட  முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், இன்று தனது தந்தையின் 80 பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நடைபெறும் முத்து விழாவில் கலந்து கொண்டதால் இன்று தனது பதவியை ஏற்று கொள்ளவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaika take charge has mp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->