கையில் உணவுத் தட்டுடன் கண்ணீர்விட்டு கதறி அழுத காவலர் | கட்டாய பணிவிடுப்பு கொடுத்த அரசு.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி கண்களில் கண்ணீருடன், கையில் உணவுத் தட்டுடன், உத்தரப் பிரதேச மாநில தலைமைக் காவலர் மனோஜ் குமார் பொதுமக்கள் முன்பு தனது துயரத்தை தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து தலைமைக் காவலர் மனோஜ் குமார் கதறி அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அவர் கையில் வைத்திருந்த தட்டில் சில ரொட்டிகளும், கொஞ்சம் அரிசி சாதமும், பருப்பும்  இருந்தபடி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். வேலை முடிந்த பிறகு இந்த ரொட்டிகளைத்தான் நாங்கள் சாப்பிட வேண்டும். எங்களால் இந்த உணவை சாப்பிட முடியவில்லை. எங்களது வயிற்றுக்குள் எதுவும் இல்லை என்றால் நாங்கள் எப்படி வேலை செய்ய முடியும் என்று கூறி கதறி அழுதுள்ளார்.

இதனை அடுத்து, தற்போது அவர் நீண்ட நாட்கள் கட்டாய பணி விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மூத்த காவல் அதிகாரிகள் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி, பணியை விட்டு நீக்க  திட்டமிட்டுள்ளதாக காவலர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh policeman crying food government give forced leave


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->