இந்திய நாட்டின் மிகப்பெரிய மதமாற்ற குழுவின் தலைவர் அதிரடியாக கைது.! வெளிநாட்டு பணம், கட்டாய மதமாற்றம்.! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டின் மிகப்பெரிய மதமாற்ற குழுவின் தலைவராக செயல்பட்ட மவுலானா கலீம் சித்திகி என்பவரை, உத்தரபிரதேச மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஜாமியா இமாம் வலியுல்லா எனும் அறக்கட்டளையின் தலைவரும், இந்திய நாட்டின் மிகப்பெரிய மதமாற்ற குழுவின் தலைவருமான மவுலானா கலீம் சித்திகியை,  உத்தரப்பிரதேச மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

மவுலானா கலீம் சித்திகி நடத்திவந்த ஜாமியா இமாம் வலியுல்லா எனும் அறக்கட்டளைக்கு சட்டவிரோதமாக பணம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த அறக்கட்டளை பல மதராசாக்களுக்கு பணம் அனுப்பியுள்ளதும் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த கைது சம்பவம் குறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமார் தெரிவிக்கையில், "கடந்த ஜூன் மாதம் மிகப்பெரிய மதமாற்ற கும்பலின் செயல்பாட்டை நாங்கள் கண்டறிந்தோம். இவர்களின் இலக்கு ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுவர்களை கட்டாயமாக மதம் மாற்றுவது தான்.

மவுலானா நடத்திவரும் அந்த அறக்கட்டளைக்கு 3 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் வந்துள்ளது, இதில் ஒன்றரை கோடி ரூபாய் பக்ரைன் நாட்டில் இருந்து வந்துள்ளது. இது சம்மந்தமாக தீவிரவாத எதிர்ப்பு படையைச் சேர்ந்த 6 குழுக்கள் விசாரணை செய்த்து வருகிறது.

நேற்றிரவு மீரட் வந்த மவுலானாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று ஏடிஜிபி பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, 

மவுலானாவை கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., அமனதுல்லா கான் தெரிவிக்கையில், "இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தனம் இது. மதச்சார்பற்ற கட்சிகள் இது போன்ற விவகாரங்களில் அமைதியாக இருப்பது பாஜகவை மேலும் பலப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttar pradesh mavulana arrest


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->