அமெரிக்க அடுத்த அதிபர் இவர் தான்! அதிர்ச்சியை கிளப்பும் அப்டேட்!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற பரபரப்பு உலகம் முழுவது ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடுத்து ட்ரம்ப் இல்லை என்ற கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1984 ஆம் ஆண்டு முதல் கடந்த 2016 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக யார் வருவார் என்று சரியாக கணித்து வரும் அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைவார் என்றும், ஜோ பிடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்றும் கணித்து உள்ளார்.

அடுத்த அதிபர் யார் என்பதை கணிக்க பொருளாதார நிலை, மக்களிடம் உள்ள மனநிலை, சமூக அளவில் உள்ள பதற்ற நிலை, ஊழல், வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு உட்பட 13 அம்சங்கள் அடிப்படையில் அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர், அலன் லிச்ட்மேன் (Allan Lichtman) மேற்கொள்கிறார்.

நாட்டில் கொரோனா பரவல், போலீஸார் அராஜகம், கருப்பர் ஒருவர் மரணம் வன்முறை, போராட்டங்களால் அடுத்த அதிபர் ட்ரம்ப் வர வாய்ப்பு இல்லை என தனது கணிப்பை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

usa next president who


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->