காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் கமல் பட நடிகை!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை ஊர்மிளா மடோன்கர் அறிவித்துள்ளார். 

கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை ஊர்மிளா, நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் மக்களவை தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். 

இந்த நிலையில் மஹாராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி மற்றும் முரண்பாடுகள் காரணமாகவே ஊர்மிளா விலகல் முடிவை எடுத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

urmila matondkar quits from congress party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->