நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான் மநீம கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. 

ஆனால், இதுவரை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. இந்த வாரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட இருக்கும் வெற்றி வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை வெளியிடுகிறேன். தகுதி மிக்க இவர்களைத் தலைவர்களாக்குங்கள். வெற்றி பெறச் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Urban Local Body Election MNM Party 2nd candidate list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->