இ-பாஸ் பெறாமல் பயணித்ததால் உதயநிதி கைதா.?! அமைச்சர் பரபரப்பு தகவல்.!  - Seithipunal
Seithipunal


மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, "சென்னையில் இருக்கும் குடிசை பகுதிகளில் தன்னார்வலர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது\, நல்ல பலன்களை கொடுத்துள்ளது. அத்துடன் அன்றாடம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். 

அனைத்து மருத்துவர்களுக்கும் மற்றும் மருத்துவப் பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும், மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் பரவி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இ பாஸ் கூட இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வரை பயணம் செய்துள்ளார்.

இ பாஸ் வைத்துதான் தூத்துக்குடி சென்றதாகக் கூறும் அவர் ஏன் அதை ட்விட்டரில் வெளியிடவில்லை.?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் இ பாஸ்  செல்லாமல் 420 வேலை செய்து தூத்துக்குடிக்கு பயணித்திருந்தால் சட்டம் தன்னுடைய கடமையை கட்டாயம் செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanithi may arrest for tutucorin visit without e pass


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->