திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குட்டையை கிளறி விடும் உதயநிதி ஸ்டாலின்..? அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வான எச்.வசந்தகுமார், தனது எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நாங்குநேரி சட்டமன்ற எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்தார்  இதையடுத்து, நாங்குநேரி காலியான தொகுதியாக தமிழக அரசு அறிவித்தது , இதையடுத்து தேர்தல் ஆணையமும் நாங்குநேரி தொகுதியை காலியான தொகுதியாக அறிவித்து விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது 

இந்த நிலையில், திருச்சி பொது கூட்டத்தில் ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என பேசிய அவர். மேலும் நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு தர வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

நாங்குநேரி தொகுதியை ராஜினாமா செய்தது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், காலியாக உள்ள அத்தொகுதிக்கு மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர்களே நிறுத்தப்படுவார்கள் என காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில், நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு தர வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது காங்கிரஸ்-திமுக  கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கிவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanidhi speak about nanguneri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->