துண்டுசீட்டை மாற்ற மறந்த உதயநிதி.! பிரச்சாரத்தில் நடந்த ருசிகர சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழத்தில் நாளை மறுநாளன்று தேர்தல் நடைபெற்றவுள்ள நிலையில்., கூட்டணி அமைத்த கட்சிகள் அனைத்தும் தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்து வருகிறது.  மக்களவை தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய முதல் பாமக அதிமுக கூட்டணியில் திட்டங்களை வைத்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில், திமுக சார்பில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் அக் கட்சியின் முதன்மை பிரச்சார நபர் என்று கூறிக்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் அதிமுக தலைவர்கள் பாமக தலைவர்களையும் பாஜக தலைவர்களையும் கடுமையாக ஒருமையில் தகாத வார்த்தைகளில் விமர்சனம் செய்து வந்தார். 

அவரை விட பல படிகள் மேலே சென்ற அவருடைய தந்தை மு க ஸ்டாலின் தான் ஒரு கட்சியின் தலைவர், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் துணை முதல்வர் என்பதனை எல்லாம் மறந்து ஏதோ ஒரு சாதாரண மனிதன் தெருவில் பேசுவது போல கடுமையான சொற்களால், திரைப்படங்கள் பார்ப்பது போல வசவு சொற்களை அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மு க ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் நாங்கள் முறைகேடு செய்தது குறித்து பேசிய மு க ஸ்டாலின் எங்களுடன் விவாதிக்க தயாரா என்று அன்புமணி ஸ்டாலினிடம் விளக்கம் கேட்டிருந்தார். 

இதற்கு தொடர்பே இல்லாமல் உதயநிதி ஸ்டாலின்  8 வழி சாலை தொடர்பாக நான் விவாதிக்க தயாராக இருக்கின்றேன் இடத்தையும் நேரத்தையும் அன்புமணியே வெளியிடலாம் என்று அறிவித்தார். இதனை பெரிதாக திமுக நபர்கள் விளம்பரம் செய்தார்கள். ஆனால் அடிப்படை அரசியல் கூட அறியாதவர்கள் தான் இதன் விமர்சனம் செய்திருக்க முடியும் என  அரசியல் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். எட்டு வழி சாலை திட்டம் குறித்த வழக்கு விசாரணையானது நீதிபதிகளின் முன்னிலையில் வந்து., மரு.அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து உதயநிதியை கலாய்க்கும் வகையில் இணையத்தில் இருந்த அன்புமணியின் தம்பிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சம்மட்டி அடியை வழங்கினர். 

இது குறித்து இணையவாசிகள் தெரிவிப்பதை போலவே., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திமுக நடத்திய கிராம சபை கூட்டத்தில் கோவில்பட்டியில் பங்கேற்ற உதயநிதியிடம் சிறுமி ஒருவர் கேட்ட கேள்விக்கு தாத்தா டிவி கொடுத்தார்., அப்பா ரிமோட்டும் டிஸ்சும் வழங்குவார் என்று தெரிவித்தது., அங்கு அதிக கைதட்டலை பெற்றாலும்., நாட்டின் நிலையை அறிந்த பல நபர்கள் படித்த நபர் என்ற கால் அறிவு கூட இல்லாத நபரை போல டிஷ் வழங்குவேன் என்று கூறுவது என்ன விதத்தில் சரியாக உள்ளது. உண்மையில் இவர் படித்த நபர்தானா? இல்லை அதிலும் ஊழல் புரிந்து பட்டத்தை பெற்றாரா என்று கேள்விகளை எழுப்பினர். 

இந்த நிலையில்., நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி மீண்டும் தனது தந்தையை போலவே துண்டு சீட்டை பார்த்து வாசிக்க துவங்கினார். பால் ஊத்தி மூடிய பிரச்னையை மீண்டும் குழி தோண்டி எடுத்து வம்படியாக சிக்கினார். ஏற்கனவே முடிந்த 8 வழி சாலை பிரச்சனைக்கு மீண்டும் துண்டு சீட்டை பார்த்து அன்புமணி என்னுடன் விவாதிக்க தயாரா என்று கேள்வியெழுப்பவே., இதனை கண்ட இணையவாசிகள் அப்பனுக்கு தப்பிப்பாமல் பிறந்த புள்ளையாக உள்ளீர்கள் என்று கூறி வருகின்றனர். மேலும்., துண்டுசீட்டு எக்ஸ்பீரி தேதி முடிந்து பல நாள் ஆச்சு இன்னும் மாற்றாமல் அப்பன் பெயரை தப்பாமல் காத்து இருங்கள் என்று கலாய்த்து வருகின்றனர்.

English Summary

udhayanidhi could not memorize changing paper about election Campaign


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal