22 வழக்கு., 28 கோடி ருபாய் சொத்து., உதயநிதியின் வேட்புமனு.! - Seithipunal
Seithipunal


திமுக தொண்டர்களால் மூன்றாம் கலைஞர் என்று அழைக்கப்படும், கருணாநிதி பேரனும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகனுமாகிய உதயநிதி, வரும் சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உதயநிதி வேட்பு மனு தாக்கல் செய்தார். 

உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு, அவரின் வேட்புமனுத் தாக்கலில் வெளியாகி உள்ளது.

அதன்படி, உதயநிதி ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு 20.13 கோடி ரூபாயும், அசையா சொத்து மதிப்பு 5.37 கோடி ரூபாயும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வேட்புமனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UDHAYANIDHI Candidate petition


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->