" பேராசிரியர் தாத்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள் " - உதயநிதி ஸ்டாலின்..!   - Seithipunal
Seithipunal


க.அன்பழகன் உடல் நலம் குறைவால், அவரது இல்லத்தில் ஓய்வு பெற்று வருகிறாா். இந்த நிலையில் அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவரது 98-வது பிறந்த நாளில் திமுக கட்சியினா் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிப்பதை முழுமையாகத் தவிா்த்திட வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில், “பேராசிரியர் - பொதுச்செயலாளர் மட்டுமல்ல; எனது பெரியப்பா! நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முதுபெரும் தந்தை, இனமானம் - தன்மானம் ஊட்டிய தாய்; இயக்கம் நடத்த வழிகாட்டிய அண்ணன்! 98-வது பிறந்தநாளில் பேராசிரியர் பெருந்தகையை, வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன்!“என்று கூறிப்பிட்டிருந்தார்.

மேலும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, “நூற்றாண்டு கண்ட திராவிட இயக்க தளபதிகளில் ஒருவரான பொதுச்செயலாளர் பேராசிரியர் தாத்தா அவர்களுக்கு இன்று 98-வது பிறந்தநாள். இந்த நெடிய பயணத்தை, என்னைப்போன்ற மாணவர்கள் கற்கும்வகையிலான ஆகச்சிறந்த பாடத்திட்டமாகவே வடிவமைத்துக்கொண்ட பேராசிரியர் தாத்தாவை வணங்குகிறேன்“ என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanidhi and stalin wishes to anbalagan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->