கோவில் பணம் களவாட இரு உயிர்கள் பலி! -திமுக அரசின் அலட்சியம் தான் காரணம்...! - நயினார் குற்றச்சாட்டு
Two lives lost temple money theft DMK government negligence reason Nayinar alleges
விருதுநகர் மாவட்டம், அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில் நிகழ்ந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் கோவிலில் உண்டியல் திருட்டைத் தடுக்க முயன்ற இரு இரவுக்காவலர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தனது ‘எக்ஸ்’ தள பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் பதிவில்,"அரசின் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலிலேயே இவ்வளவு கொடூரமான குற்றம் நிகழ்வது, சட்டம் ஒழுங்கு முழுமையாக வீழ்ந்துவிட்டதைக் காட்டுகிறது.
கோவில் சிலை சேதப்படுத்தல் முதல் உண்டியல் திருட்டு வரை தொடர்ச்சியாக நடைபெறுவது திமுக அரசின் அலட்சியத்தின் விளைவு. இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு காரணம் அரசு காட்டும் மெத்தனமே".அதுடன்,“மக்களின் மதநம்பிக்கைகளையும், சட்டம் ஒழுங்கையும் தாக்கும் இந்தக் கொடூரக் குற்றம் குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும்.
வழக்கம்போல கண்துடைப்பு விசாரணையில் அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. கோவில் பணத்திற்காக இரண்டு உயிர்களை காவு வாங்கிய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்"என அவர் தமது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.இந்தக் கொலைச் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் குற்றச்சாட்டுகள், தமிழகத்தில் மீண்டும் கோவில் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது.
English Summary
Two lives lost temple money theft DMK government negligence reason Nayinar alleges