நீதிமன்றம் மறுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது! - தினகரன்!  - Seithipunal
Seithipunal


சேலம் – சென்னை  எட்டு வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஏழை, எளிய விவசாய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சினையில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. 

மக்களின் எண்ணத்திற்கு விரோதமாக செயல்படும் பழனிச்சாமி அரசு, எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற விசாரணைகளின் போது கருத்துகளை முன்வைக்கக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். இதற்காக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் எப்போதும் ஆதரவாக இருக்கும்.   

சேலத்தில் விவசாய அமைப்புகளின் சார்பில்  இன்று முன்னெடுக்கப்பட்ட எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டங்களில் கழகத்தின் சார்பில், அமைப்பு செயலாளரும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான  திரு. எஸ்.கே.செல்வம் Ex.MLA அவர்களும், சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ்.இ.வெங்கடாசலம் Ex.MLA அவர்களும், சேலம் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.மாதேஸ்வரன் அவர்களும், மேலும் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த திரளான கழக நிர்வாகிகளும் இப் போராட்டத்தில் பங்கேற்று விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv supports formers in 8 lane road issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->