அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த தினகரன் - சட்டசபையில் அரங்கேறிய 'தெறிப்பு' சம்பவம்..! - Seithipunal
Seithipunal


மேகதாது அணை திட்டத்துக்கு, தமிழக அரசும், தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பது தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது மட்டுமில்லாமல், பிரதமர் மோடிக்கும் கடிதம் மூலம் தமிழக மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்தை விளக்கி உள்ளது.

அதுமட்டுமில்லாமல், இன்று தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டி, மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

தமிழக அரசின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் மாலை 4 மணி தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக முதலவர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை புரிந்துள்ளனர்.

இதனையடுத்து, தமிழக முதல்வர் தலைமையில் தொடங்கிய சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அவர்கள், மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பேச தொடங்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய துரைமுருகன்  காவிரி விவகாரத்தில் கருணாநிதி எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது.

காவிரி விவகாரம் தொடர்பாக, கருணாநிதி நேரில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார், அவரது நடவடிக்கைகளை அப்படியே மறைக்க கூடாது. நான் ஒரு விவசாயி, அதனால் தான் உணர்வுப்பூர்வமாக தெரிவித்தேன்' என்று பேசியுள்ளார்.

மேலும், தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி தந்தோம் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கண்டன தீர்மானமாக இதனை நிறைவேற்ற கோரினேன், ஆனால் அதனை ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இறுதியில் மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசின் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.  தீர்மானத்திற்கு டிடிவி தினகரனும் ஆதரவு தெரிவித்தார்.

இதன் மூலமாக் தமிழக சட்டபேரவையில் வெகுநேரமாக நிலவி வந்த கூச்சல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv supports admk decision


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->