தேர்தல் தோல்வி குறித்து டி.டி.வி தினகரன் பரபரப்பு பேட்டி!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டி.டி.வி தினகரனின் அமமுக தமிழகத்தில் 37 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தனர் .தேர்தலில் தோல்வியடைந்ததை காட்டிலும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது தான் டி.டி.வி தினகரனைனுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. மக்களவை தேர்தலை போல 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அமமுக தோல்வியை சந்தித்தது  

இந்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் டி.டி.வி தினகரன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், தேர்தலில்  வெற்றியை எதிர்பார்த்தாலும் மக்கள் அளித்த தோல்வியை கண்டு துவளவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று தொடர்ந்து மக்கள் நலனுக்காக பாடுபடுவோம். மேலும் மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் கட்டாயமாக்குவது தவறான செயல், அதனை திணித்தால் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv speak about his party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->