சிறையிலிருந்து வெளியே வருகிறாரா சசிகலா! தினகரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!! - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அடையாளப்படுத்தப்பட்டவர் சசிகலா. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் குற்றம் உறுதிபடுத்தப்பட்டு அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

தற்பொழுது, இம்மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கின்றனர். சசிகலா சிறைக்கு சென்று இரண்டரை வருடங்கள் உருண்டோடி விட்டது. இந்நிலையில், நன்னடத்தை விதிகளின் கீழ் சசிகலாவை விடுவிக்க கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் மாநில அரசுக்கு பரிந்துரை செய்து இருப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாகிது  

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என எந்த கோரிக்கையும் எங்கள் தரப்பில் இருந்து வைக்கப்படவில்லை என தெரிவித்தார்.
 

English Summary

ttv meet sasikala


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal